ஏதாவது ஒரு விழா, அல்லது திருமண நிகழ்வில் ஒரே மேடையில் பிரபலங்கள் சந்தித்துக் கொள்வது அரிதான விஷயம்.
அப்படி சமீபத்தில் நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா தம்பதியின் இளைய மகளுடைய திருமணம் நீலகிரியில் எளிமையாக நடந்தது.
பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், நடிகர் தனுஷ் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. காரணம், ரீல் அம்மா, மகனாக நடித்தவர் சரண்யா, தனுஷ். தனது மகள் திருமணத்திற்கு வந்த தனுசை வெல்கம் செய்த சரண்யா, கண்டிப்பா சாப்பிட்டு போகணும் என மேடையில் கூறியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
தனுஷை பாத்ததும் ப்ரியா அருள் மோகன் 😍🥰😍 pic.twitter.com/a4hoSXwosZ
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) February 9, 2026
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், தனுஷ் உடைய மேலாளர் ஸ்ரேயாஸ், நடிகை பிரியங்கா மோகனை பார்த்ததும், கட்டியணைத்தார், அவருக்கு கைக் கொடுத்த பிரியங்கா மோகன், தனுஷை பார்த்ததும் ஆச்சரியமான ஒரு ரியாக்ஷனை கொடுத்தது மட்டுமல்லாமல், தனுஷை கட்டியணைத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

