கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.

திமுகவை ஒரு “தீய சக்தி” என விமர்சித்த அருண்ராஜ், அந்த சக்தியை வீழ்த்துவதே தவெக-வின் முதன்மை இலக்கு என்றார். கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கட்சி மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், “திமுக சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்” என உறுதிபடத் தெரிவித்தார்.

