நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நிலையில், சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதாக அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், விழுப்புரத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார்.
அது மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என முதல் மாநாட்டிலியே அறிவித்தது, சக அரசியல் கட்சிகளிடையே பேசுபொருளானது.
திமுக, அதிமுக இதுவரை கூட்டணி போட்டு ஆட்சி நடத்தினாலும், இது ஆட்சியில் பங்கோ, அதிகாரமோ கொடுத்ததில்லை, ஆனால் விஜய் கட்சி தொடங்கிய போதே இதை அறிவித்தார்.

ஆனால் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி பேரம் பேசவில்லை. இது குறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த அவர், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது தவெகவின் கொள்கை முதுடிவு. கூட்டணிக்கு கட்சி வருவார்கள் என எதிர்பார்த்து இதை விஜய் அறிவிக்கவில்லை, கொள்ளை முடிவு என்பதால்தான் அறிவித்தார் என கூறினார்.

