நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கமல் பேசிய உரை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல் உரையை பேசினார் கமல்ஹாசன்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி தொடங்கிய கமல்ஹாசன், ஆங்கிலத்தில் சரளமாக பேசி பின் தமிழில் முடித்தார். அவர் தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாடலாசிரியர், கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில், கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும்…

“அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு
ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல்
நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும்.. என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும்.. காடு அதிரட்டும்
களிறே பிளிறு” என குறிப்பிட்டுள்ளார்.

