பல வெற்றி படங்களின் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது “அரசன்” திரைப்படம். இதில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக சிம்பு இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முன்னதால் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீடு மற்றும் நடிகர் விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “விஜய் பல ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

ஜனநாயகன் அவரது கடைசிப் படம் என்பதால், அந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ட்வீட் செய்தேன். அரசியல் குறித்து எனக்கு அறிவில்லை; அதைப் பற்றி பேச நான் சரியான நபரும் அல்ல. அவரது அரசியல் பயணத்திற்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.

