பாஜக கொடுத்த தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று பணியாற்றி வருகின்றனர். இதனிடையே விருகம்பாக்கம், சிங்காநல்லூர் உட்பட 6 தொகுதிகளுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது தந்தையின் உடல்நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனால் சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேறு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “என் தந்தையின் உடல்நலக் காரணமாக தற்போது நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனிப்பது எனது கடமை. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து தற்போது கூற முடியாது; அதற்கு காலமே பதில் சொல்லும். தந்தையின் உடல்நிலை காரணமாக சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுகிறேன். இது குறித்து எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்” என்றார்.

