நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் மனதை கவர்ந்த விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்ற பெயரும் உண்டு.
ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி, ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்து வந்தார்.
தற்போது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது, காயமடைந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பூரண குணமடைய வேண்டும் என சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
விஜய் சேதுபதி காயமடைந்த தகவல் சமூக வலைதளங்களில் மட்டும்பரவி வருவதால் இது எந்தளவு உண்மையென தெரியவில்லை.

