நடிகர் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங் மீது கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, அண்மைக் காலமாக பல்வேறு சர்வதேச ரேஸிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அபுதாபி ரேஸிங் களத்தில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து, துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

