பொங்கலுக்கு வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
ஜனநாயகன் படம் தெலுங்கு படமான பகவத் கேசரியின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இருப்பினும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் ஹெச் வினோத், இது விஜய் படம் என கூறிவருகிறார்.
இந்த நிலையில் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹெச் வினோத்தும், அண்ணனும் ஒரு நாள் கூப்பிட்டாங்க. ஒரு கேமியோ ரோல் இருக்கு.. அவ்ளோதான் சொல்ல முடியும் என லோகேஷ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

