சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியானது பராசக்தி.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து வரலாற்று கதையை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. படம் வெளியாகும் நேரத்தில் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை ஏற்பட்டு ஒரு சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.
இறுதியில் சொன்ன தேதியில் படம் வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் படம் திராவிடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், வரலாற்றை மாற்றி எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோலோவாக களமிறங்கிய பராசக்தி படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.51 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் வெறும் ரூ.27 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
உலகளவில் படம் ரூ.100 கோடியை விரைவில் தாண்டும் என்றாலும் படத்தின் பட்ஜெட், ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி என்பதால் வசூல் குறைவு தான் என்று தெள்ளத்தெளிவாகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

