திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சர்வே நம்பர் பகுதியில் வசித்து வந்தவர் கோபாலகிருஷன் (வயது 45).
இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து இறந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியில் மனோஜ்குமார் என்பவர் தந்தை இல்லாத நிலையில் தாய் பரமேஸ்வரி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மனோஜ் குமார் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தாயான பரமேஸ்வரியை பார்க்க கோபாலகிருஷ்ணன் அடிக்கடி வந்துள்ளார். மேலும் கோபாலகிருஷ்ணன் பாரமேஸ்வரிடம் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரி வீட்டிற்கு சென்ற நிலையில், பரமேஸ்வரியிடம் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்,
மேலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு வந்த மனோஜ் குமார் , தனது தாயை அடிக்க சென்ற கோபாலகிருஷ்ணனை அருகில் கிடந்த பெரிய கல்லை கொண்டு கோபாலகிருஷ்ணன் தலையில் பலமாக தாக்கியதில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் பலியானார்.

மேலும் இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் கொடைக்கானல் காவல்துறையினர் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மனோஜ்குமாரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

