சில்லறை பணம் வாங்க முடியாது, டிஜிட்டல் முறையில் தான் பணம் செலுத்த வேண்டும் என அடாவடி செய்த கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கேண்டின் நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் ரங்கநாதர் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வங்கி தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத சுமார் 1,200 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்று இருந்தனர்.தேர்வு எழுத வந்தவர்கள் அங்கு உள்ள சாய் கேண்டினில் டீ மற்றும் உணவுப் பொருள்களை வாங்கி உள்ளனர்.
அதற்கான தொகையை பணமாக வழங்கிய போது கேண்டின் நிர்வாகத்தினர் அதனை வாங்க மறுத்து உள்ளனர். மேலும் அந்த கேண்டின் நிர்வாகத்தினர் இந்த வளாகத்தில் ஜிபி மட்டும் செலுத்த முடியும் ரொக்க பணத்தை ஏற்க மாட்டோம், என்றும் கூறி உள்ளனர்.
பணம் மட்டுமே வைத்து இருந்த தேர்வர்கள் தர்ம சங்கடத்திற்கு உள்ளான நிலையில் கேண்டின் ஊழியர்கள் பணம் இல்லை என்றால், நீங்கள் இங்கு வேலை செய்ய வேண்டும் என ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேர்வர் ரஞ்சித் குமார் என்பவரின் சகோதரர் மோகன் குமார் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை முடிவு அடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். இந்திய அரசு அங்கீகரித்த ரொக்கப் பணத்தை கல்லூரி கேன்டீன் நிர்வாகம் மற்றும் கேண்டின் கட்டாயம் வாங்க வேண்டும் மறுக்கக் கூடாது என்றும், தேர்வுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக கல்லூரி நிர்வாகம் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், வழக்கு செலவிற்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இந்த தீர்ப்பின் நகல் தற்பொழுது வழங்கப்பட்டு உள்ள நிலையில் நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதில் இந்த தீர்ப்பு ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

