இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி, தயாரித்த படம் துருவ நட்சத்திரம். விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 2010ல் முதலில் சூர்யா கமிட்டாகி நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களாக அவர் விலக, விக்ரம் இணைந்திருந்தார்.
மீண்டும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. நிதி பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனை காரணமாக படம் வெளியாகுமா என்ற சூழல் எழுந்தது.
துருவ நட்சத்திரம் ஆடியோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருந்தது. ஆனால் படம் இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்ட தேதியை மீறி தடைபட்டது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீட்டிற்கான பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

