Close Menu
    What's Hot

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    U TvU Tv
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • சிறப்பு பகுதி
      • கல்வி
      • தொழில்நுட்பம்
      • மகளிர்
      • சமையல்
      • ஆன்மிகம்
      • ஹெல்த்
    U TvU Tv
    Home»தமிழ்நாடு»”தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு ! போலீஸ் தனது பலத்தை காண்பிக்க வேண்டிய நேரம் கார்த்திக் சிதம்பரம் எம் பி பேச்சு”
    தமிழ்நாடு

    ”தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு ! போலீஸ் தனது பலத்தை காண்பிக்க வேண்டிய நேரம் கார்த்திக் சிதம்பரம் எம் பி பேச்சு”

    Prime ReporterBy Prime ReporterJanuary 3, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆர் ராஜசேகர் புதிதாக கட்டியுள்ள ஆர் எஸ் அர்ச்சனா இல்ல விழாவில் பங்கேற்ற சிவகங்கை தொகுதி மக்களை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார் இதில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிவிட்டரில் காங்கிரஸ் கட்சி அழிந்து வருவதாக வெளியிட்டது குறித்தான கேள்விக்கு, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிவிட்டரில் காங்கிரஸ் அழிந்து வருவதாக டிவீட் செய்தததை நானும் பார்த்தேன் எதற்காக எழுதினார்கள் என தெரியவில்லை அவர்கள் தொகுதியில் ஏதாவது நடந்து அதனால் எழுதினார்களா என தெரியவில்லை. காங்கிரஸ் நன்றாகவே உள்ளது என்றார்.இளைஞர்கள் டிவிகே கட்சிக்கு தாவிக்கொண்டிருப்பது குறித்தான கேள்விக்கு, வாடிக்கையான கட்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவு என்பது எப்போதும் குறைவாகவே இருக்கும் புதிய கட்சிகளுக்கு எப்போதும் ஆதரவு அதிகமாகவே இருக்கும். நான் ஒத்துக்கொள்கிறேன் முதல் தலைமுறையினரின் ஓட்டுக்கள் தவெக விற்கு செல்கிறது என்பதை.தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணையுமா என்ற கேள்விக்கு, நாங்கள் இண்டியா கூட்டணியில் உள்ளோம். இந்திய அளவில் இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டைப் பொருத்த வரை திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, அனைத்து கட்சிகளுமே தேர்தலில் நிற்பது ஆட்சிக்கு வரவே இல்லை என்றால் பொது சேவை செய்துவிட்டு போலாமே. வேட்பாளர்கள் ஜெயித்தால் அரசாங்கத்தில் பங்கேட்க வாய்ப்பு கிடைத்தால் அனைத்து கட்சியினருமே கேட்பார்கள். அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு. ஆனால் அது சூலலைப் பொருத்து அமையும் என்றார்.


    பாஜக வைப் போல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினரையும் திமுக வளர விடவில்லையோ என்ற கேள்விக்கு, இல்லை என்றும், நாங்கள் வளரவில்லை என்றால் நாங்கள் மட்டுமே காரணம் இதை நான் ஒத்துக்கொள்கிறேன், யாரையும் குற்றம் சுமத்தமாட்டோம் என்றார். நாங்கள் வளரவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளை அழுத்தமாக பேசவேண்டும் அதில் நாங்கள் தவறிவிட்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன் என்றார்.ஜென்சி தலைமுறையினர் குறித்தான கேள்விக்கு, உலகமெங்குமே ஜென்சி தலைமுறையினருக்கு வாடிக்கையான அரசியில் மீது நம்பிக்கை இல்லை. வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற இடங்களில் அவ்வாறுதான் நடந்துள்ளது. அவர்களால் ஜெயிக்க முடியாது வாடிக்கையான அரசியல் கட்சிகள் தான் ஜெயிக்க முடியும் என்றார்.


    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் கஞ்சா புழக்கம் குறித்தான கேள்விக்கு, நான் ஏற்கனவே கூறியுள்ளேன். போலீஸ் தனது பலத்தை காண்பிக்க வேண்டிய நேரம் இது. ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தி கண்ணுக்கு தெரியும் இடங்களில் காவல்துறையினர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சேதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் ரவுடிகளில் படியலை எடுத்து அவர்களை வாரம் 3 முறை காவல்நிலையம் அழைத்து கையெழுத்து வாங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சாதரண மக்களுக்கு நம்பிக்கை வரும். தற்போது கஞ்சா போதையில் இளைஞர்கள் மோசமாக போய்கொண்டிருக்கிறார்கள். எனவே போலீஸ் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.


    திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பீர்களா என்ற கேள்விக்கு, அனைத்து கட்சிகளுக்கு தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்கவேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் இருப்பது 234 தொகுதிதானே அதற்குள் முடிவாகும். இதேபோல் பாராளுமன்ற தேர்தலில் கேட்டார்கள் அதை பேசி முடிவுக்கு வந்து போட்டியிட்டு வென்றும்விட்டோம் என்றார்.தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ் ஐ ஆர் பணி குறித்த கேள்விக்கு, முழுமையான் திருப்தி இல்லை எனவும், 1 கோடி வாக்களர்கள் வரை நீக்கியுள்ளார். 4 வகையான வாக்காளர்களை நீக்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அதில் ஆட்கள் இல்லாதது, இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பவர்கள் பெயர்களை நீக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முகவரி இல்லாமல் 60 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. முகாம் நடைபெறுகிறது அதன் பிறகு தெரியவரும். இதை இப்போது செய்திருக்க வேண்டியது இல்லை. மே மாதம் தேர்தல் வரும் என்பது தேர்தல் ஆனையத்திற்கு தெரியும் எனவே இதனை கடந்த ஆண்டு ஜனவரியிலேயே ஆரம்பித்திருக்கலாம். இது ஏற்கனவே வேலைப் பளுவில் இருக்கும் அரசாங்க பணியாளர்களுக்கு மேலும் மன உழைச்சளை கொடுக்கிறது என்றார்.அரசாங்க ஊழியர்கள் போராட்டம் மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தான கேள்விக்கு, எந்த ஒரு துறையாக இருந்தாலும் குறை இருக்கதான் செய்யும், அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கிறது. பேசி தீர்வு காண்பார்கள். தேர்தல் அறிக்கை வெளியிடும்போது அரசியல் கட்சிகள் பெரிய திட்டங்களுடன் வெளியிடுகின்றனர். ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் பணம் பற்றாக்குறை காரணமாக அவற்றை நிறைவேற்ற முடியாமல் போகிறது என்றார்.

    Congress Party TN Crime Awareness Drug Menace TN Ganja Circulation Karti chidambaram Karti Chidambaram MP Speech Tamil Nadu Law and Order Tamil Nadu Police Tamil Nadu Politics கார்த்திக் சிதம்பரம் தமிழக சட்டம் ஒழுங்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? விஜய் – திரிஷா குறித்த விமர்சனம்.. தவெக கண்டனம்!

    February 14, 2026

    சர்ச்சையை பற்றி கண்டுகொள்ளாத விஜய்… திமுக அரசுக்கு எதிராக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

    February 14, 2026

    28 வருஷம் ஆச்சு.. பயங்கரவாதிகளுக்கு துணை போகும் திமுகவை அகற்ற வேண்டும்.. அண்ணாமலை சூளுரை!

    February 14, 2026

    முன்னாள் அமைச்சர் வீட்டில் ஆற்று மணல் பதுக்கல்? 320 யூனிட் மணல் பறிமுதல் செய்து அதிரடி..!

    February 13, 2026

    தேர்தல் தோல்வி பயம்தானே தவிர மகளிர் மீது அக்கறையில்லை… முதலமைச்சர் ஸ்டாலின் மீது டிடிவி சாடல்!

    February 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Don't Miss

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து…

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Most Popular

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டம் கொண்டு வந்தோம் வேலுமணி பெருமிதம்

    December 22, 2025
    Our Picks

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய உடனே டுவிஸ்ட்.. திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்..!

    February 14, 2026

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    February 14, 2026

    பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ‘மை லார்ட்’ : படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சூர்யா!

    February 14, 2026

    பார்த்தாலே நாக்கு ஊரும் ‘இறால் நெய் வறுவல்’.. வீட்டிலேயே செய்யும் எளிய முறை..!

    February 14, 2026
    U Tv
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • குற்றம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.