Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது… யாரை சொல்கிறார் ஜோதிமணி?!
    தமிழ்நாடு

    ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது… யாரை சொல்கிறார் ஜோதிமணி?!

    Prime ReporterBy Prime ReporterJanuary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tamil Nadu Congress is heading towards destruction due to the selfishness of a few... Jyothimani's sensational post!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

    தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ,ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.

    எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

    இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை,ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத,பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி,சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.

    தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக
    முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.

    Tamil Nadu Congress is heading towards destruction due to the selfishness of a few... Jyothimani's sensational post!

    தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம்,மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு தனது மனக்குமுறலை பதிவாக வெளியிட்டுள்ளார்.

    Congress Congress MP Jothimani MP Politics Selvaperunthagai Tamilnadu Congress அரசியல் கரூர் எம்பி ஜோதிமணி காங்கிரஸ் எம்பி செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.