பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்துக்கு எட்டியுள்ளது. 80 நாட்களுக்கு மேலாக ஆன நிலையில் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் ஏராளமான போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி, தற்போது சொற்ப போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் இரண்டு எவிக்ஷன் நடந்தது.
முதலில் அமீத் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் யாருமே எதிர்பாரா வகையில் கனித்திரு வெளியேற்றப்பட்டார். இது அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது.
அபாய கட்டத்தில் கனி மற்றும் சாண்ட்ரா இருந்தாலும், அனைவரும் சாண்ட்ராவை தான் வெளியேற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கனி வெளியேற்றப்பட்டது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய கனி, முதல்முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இத்தனை நாளாக எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டாலும் ஒரு நாள் முழுக்க தனிமையில் தான் வைத்திருப்பார்கள். இது எல்லோருக்கும் தெரியும், அப்போது எனக்குள் எழுந்த கேள்வி, என்னை ஏன் மக்கள் வெளியேத்துனாங்க, என்னை எதற்காக பிடிக்கல என யோசித்து கொண்டே இருந்தேன்.
அந்த ஒருநாள் நான் செத்து பிழைச்சு வந்திருக்கிறேன். பின்னர் என் கணவர், என் தங்கை விஜயலட்சுமி தான் எனக்கு புரிய வைச்சாங்க. ஆனால் மக்கள் எதற்காக என்னை வெறுத்தார்கள் என்ற கேள்வி என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது என கண்ணீர் விட்டு பேசினார்.
நான் அன்பைதான் விதைத்தேன், எதற்காக என் மீது வெறுப்பு வந்தது? என்று தெரியவில்லை. எனக்கு வந்த மெசேஜ்களை படித்து பார்த்து மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார்.

