தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் படையே உண்டு, முக்கியமாக இல்லத்தரசிகள் தங்கள் வேலைகளை சீரியல்களை பார்த்துக் கொண்டே செய்கின்றனர்.
ஒவ்வொரு சேனல்களிலும் புத்தம் புது சீரியல்களை களமிறக்கி பெண்களை இழுக்கின்றனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூட சீரியல்களை ஒளிபரப்புகின்றனர்.
அப்படி இந்த வாரம் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம். இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது மூன்று முடிச்சு சீரியல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு 10.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே, 9.89 டிஆர்பி ரேட்டிங்குடன் பயணிக்கிறது. 3வது இடம் கயல் சீரியல் 9.07 டிஆர்பி ரேட்டிங், 4வது இடம் மருமகள் 8.67 டிஆர்பியுடனும், 5வது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் 8.57 டிஆர்பி ரேட்டிங்குடன் இடம்பிடித்துள்ளது.

முதல் 5 இடங்களை சன்டிவி சீரியல்களே பிடித்துள்ளது. 6வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரபாகி வரும் அய்யனார் துணை சீரியலும் 8.42 டிஆர்பி ரேட்டிங், 7வது இடத்தில் சன்டிவி சீரியலான அன்னம் சீரியலும் (8.39), 8வது இடத்தில் சிறகடிக்க ஆசை (8.00), 9வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் (7.79), 10வது இடத்தில் சமீபத்தில் புத்தம் புதிய தொடராக ஒளிபரப்பாகி வரும் செல்லமே செல்லமே சீரியலும் (6.64) இடம் பிடித்துள்ளன.

