படிப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் காயமடைந்து நடக்க முடியாமல் வீல் சேரில் வந்த பிரபல நடிகருக்கு திரையுலகத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் விநாயகன். சர்ச்சைக்கு பெயர் போன விநாயகன், தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் இறந்து போன் விநாயகன், 2ஆம் பாகத்தில் எப்படி திரும்பி வருகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் மலையாளத்தல் ஆடு 3 என்ற படத்தில் நடித்து வரும் விநாயகன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கழுத்தை அசைக்க முடியாமல் வீல் சேரில் வலம் வந்தார். கழுத்து, தோள்பட்டை பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், நரம்பு பாதித்துள்ளதாகவும், விட்டிருந்தால் முடங்கி போயிருப்பேன் என விநாயகன் கூறினார். மருத்துவர்கள் 6 வாரம் ஓய்வு எடுக்க கூறியுள்ளதால் தற்போது படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்றும் கூறினார்

