
கோவையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் – புகைப்படங்கள்
கோவையின் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையின் பல்வேறு தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன. டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து அவதரித்த மாட்டுத் தொழுவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், கண்கவர் வண்ண விளக்குகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குழந்தை இயேசு உருவபொம்மையை பக்தர்களுக்கு உயர்த்திக் காட்டி இயேசு பிறப்பை அறிவித்தார். பின்னர் அந்த உருவபொம்மை குடிலில் வைக்கப்பட்டு ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி, பிற மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
.

உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதாக ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தெரிவித்தார்

