சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள மூன்றாம்கட்டளை தளபதி தெருவில் விஜய் என்ற இளைஞர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் மென் பொறியாளராக உள்ளார்.
சென்னையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் உடன் பணியாற்றிய யுவஸ்ரீ என்ற பெண்ணுடன் காதலில் இருந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து கடந்த 13ஆம் தேதி திருமணம் செய்தனர்
திருமணம் செய்த கையோடு விஜய் தனது வாடகை வீட்டிற்கு யுவஸ்ரீயை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். இந்த நிலையில் நேற்று இரவு யுவஸ்ரீயின் தங்கை இவர்கள் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்த அவர் கதவை தட்டி பார்த்தார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், குன்றத்தூர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
உடனே விரைந்து வந்த போலுசார், கதவை உடைத்து உள்ளே பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். கட்டில் மேல் யுவஸ்ரீ அலங்கோலமாக கிடக்க, தூக்கில் விஜய் தொங்கி சடலமாக கிடந்தார்.
யுவஸ்ரீயை தலையணையை வைத்து அமுத்தி கொலை செய்து பின்னர் விஜய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யுவஸ்ரீ தற்கொலை செய்த பின்னர் விஜய் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணம் செய்த பின்பும் தொடர வேண்டும் என்பதே ஒவ்வொரு காதல் தம்பதியின் விருப்பம். அப்படி மாறினால் உடனே சண்டை போடுவது, கருத்து வேறுபாடு ஏற்படுவது போன்ற பிரச்சனைதான் இப்படி தற்கொலைக்கு காரணம். மனஅழுத்தம் இருந்தால் தற்கொலை என்ற எண்ணத்திற்கு செல்லக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.

