வரும் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
அதே சமயம் இன்பன் உதயநிதி பேனரில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் முன்கூட்டியே ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இதை வலைப்பேச்சு அந்தணன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் படத்தின் வசூலை சீர்குலைக்கவே சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட உள்ளனர்.

இருநடிகர்கள் படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை, சிவகார்த்திகேயன் ரஜினியுடன் நடிக்க விரும்பினார். ஆனால் ரஜினி மறுத்தார். அஜித்துடன் நடிக்க பிளான் போட்டார், குட் பேட் அக்லி அல்லது விடாமுயற்சியில் நடிக்க முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ஆனால் கோட் படத்தில் சிவா நடிக்க விஜய் ஓகே சொன்னார்.
இப்படியிருக்க ஜனநாயகன் படத்தை ஒரு வினியோகிஸ்தர் மட்டும் வாங்கினால் பிரச்சனை இல்லை. ஆனால் பல வினியோகிஸ்தர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதுதான் பிரச்னை. ஏனென்றால், இரு படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆகும் போது வசூலும் பாதி பாதி அளவில்தான் இருக்கும்.

பெரிய தொகை கொடுத்து ஜனநாயகன் வாங்கியவர்களுக்கு நினைத்த மாதிரி வசூல் அமையாது. அதனால் முதலில் பேசப்பட்ட தொகையை கொடுக்க மாட்டோம் என கூறவும் வாய்ப்புண்டு. இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்க இங்குள்ளவர்கள் விரும்புகிறார்கள். இது விஜய்க்கு முன்பே தெரிந்து தான் அரசியலுக்கே வந்திருக்கிறார் என கூறினார்.

