திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குப்பையை தரம் பிரித்து கொட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னகாளிபாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து, குப்பை ஏற்றி வந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தின் போது சாணிப் பவுடருடன் பங்கேற்ற பெண் ஒருவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

போராட்டக்காரர்களை சமரசப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

