தற்போதைய சினிமாவில் ரீரிலீஸ் என்றாலே தனி மோகம்தான். அதிக வரவேற்பு உள்ளதால் ரீரிலீஸ் படங்கள் முன்பு வெளியாகும் வசூலை முறியடித்து வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 2004ல் வெளியான கில்லி திரைப்படம் அப்போது வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், விஜய், திரிஷா உள்ளிட்டோருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.
இதனால் கடந்த 2024ல் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 1999ல் வெளியான படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் ரஜினி ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் எந்த படம் அதிக வசூல் என போட்டி போட்டுக் கொண்டு டுவிட்டரில் வசூல் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் உண்மையில் எந்த படம் வெற்றி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் ரூ.10 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரீ ரிலிஸ் செய்யப்பட்ட படையப்பா திரைப்படம் இதுவரை ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது என்றும், ரீ ரிலீஸில் அதிக வசூல் என்ற சாதனையை படைத்துள்ளது படையப்பா என கூறப்படுகிறது.

