கோவையில் சமீபத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த சம்பவம் நடந்த 3 நாட்களில், கோவையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை சிலர் மிரட்டி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து போலீசார் ஆய்வு செய்ததில் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது, இருகூர் விவகாரத்தில் வெள்ளை கலர் காரில் பெண் ஒருவர் சத்தம் போட்டு சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல்துறையினருக்கு 100க்கு தகவல் அளித்துள்ளார்
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள் அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம் அதில் வாகன எண் தெளிவாக இல்லை.

அந்த சிசிடிவி காட்சியில் பெண் உள்ளே இருந்ததற்கு எந்த ஒரு பதிவும் தெளிவாக இல்லை. இது சம்பந்தமாக தற்பொழுது வரை புகார் வரவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தற்பொழுது வரை தெளிவாக கிடைக்கவில்லை. வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

