உப்பு என்பது வெறும் சமையலில் மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. உப்பின் நன்மைகள் சமையலறையில் இருந்து நீல்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் குளியல் அறையில் உப்பை வைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. குளியல் அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை வைப்பதால் எதிர்மறை ஆற்றலை விரட்டவும். தாக்கத்தை குறைக்கவும்.
வீட்டின் ஒற்றுமையை மேம்படுத்தவும் உதவும் என்றும், ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீகம் சார்ந்த நடைமுறை என்ற வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இந்த எளிமையான பரிகாரம் குடும்ப வாழ்க்கையில் அமைதியும் செழிப்பையும் கொடுப்பதோடு மன அழுத்தத்தையும் குறைப்பதாக சுற்றுப்புறங்களை தூய்மையாகவும் நம்பப்படுகிறது. குளியலறையில், உப்பு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறை மற்றும் கழிப்பறை என்பது வீட்டில் ‘ராகு’வின் ஆதிக்கம் உள்ள இடமாகக் கருதப்படுகிறது. இங்கிருந்துதான் எதிர்மறை ஆற்றல்கள் எளிதாக வீட்டிற்குள் பரவ வாய்ப்புள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில் குளியலறையில் உப்பை வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது, வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியலறையானது வீட்டின் மிக உணர்திறன் மிக்க பகுதியாக கருதப்படுகிறது.

எப்படி வைக்க வேண்டும்?
ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் (Glass Bowl) சுத்தமான கல் உப்பை நிரப்பிக் கொள்ளவும். இந்தக் கிண்ணத்தைக் குளியலறையின் ஒரு மூலையில், யாருடைய கைகளும் படாத உயரத்தில் வைக்க வேண்டும். கண்ணாடி கிண்ணம் பயன்படுத்துவது அவசியம், ஏனெனில் கண்ணாடி மற்றும் உப்பு ஆகிய இரண்டும் ‘ராகு’வின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கும் சக்தி கொண்டவை.
துன்பம் போக்கும் காலபைரவர்.. வழிபாட்டை இந்த நேரத்தில் செய்வது மிகச் சிறப்பு..!

கிடைக்கும் ஆச்சரியமான பலன்கள்
குடும்பச் சண்டைகள் குறையும்
வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை இந்த உப்பு ஈர்த்துக் கொள்வதால், தேவையற்ற வாக்குவாதங்கள் குறைந்து குடும்பத்தில் அமைதி நிலவும்.
பண வரவு அதிகரிக்கும்
வாஸ்து தோஷங்கள் நீங்கும்போது, வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நடக்கும் மற்றும் தேவையற்ற மருத்துவச் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
மன அழுத்தம் நீங்கும்
குளியலறையில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்குவதால், குளித்துவிட்டு வரும்போது மனம் புத்துணர்ச்சியுடனும், நிம்மதியுடனும் இருப்பதை உணரலாம்.
கண் திருஷ்டி நீங்கும்

வெளியில் இருந்து வரும்போது நம்முடன் வரும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கண் திருஷ்டிகளை நீக்க இது உதவுகிறது.
கல் உப்பு என்பது கடலில் இருந்து கிடைப்பதால், இது ‘லட்சுமி தேவியின்’ அம்சமாகவும், எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் தன்மையுடனும் விளங்குகிறது. எதிர்மறை ஆற்றலை உறிந்து கொள்வதாக நம்பப்படுகிறது. உப்பு இயற்கையாகவே தூய்மைப்படுத்தும் பண்புகளை கொண்டிருப்பதாக பெரிதும் அறியப்படுகிறது.
உங்கள் வீட்டிலும் காரணமே இல்லாமல் பிரச்சனைகள் வருகிறதென்றால், இந்த எளிய வாஸ்து முறையைப் பின்பற்றி மாற்றத்தை உணருங்கள்!
மேலும், ராகு பாதிப்பு ரீதியான குறைபாடுகளை சரி செய்கிறது. உப்பு நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி கிண்ணத்தை குளியலறையில் வைப்பது வீட்டில் சமநிலையை ஏற்படுத்துகிறது. இது துயரம் மனஅழுத்தம் மற்றும் எதிர்மறை அழிவுகளை அறிவு, அதிர்வுகளை உறிஞ்சி கொண்டு வீட்டை மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் உணரச் செய்கிறது.
உப்பை குளியலறையில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

- வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது
- ராகு தோஷம் மற்றும் வாஸ்து தோச பாதிப்புகளை குறைக்கிறது
- மன அமைதியை மேம்படுத்துகிறது
- நிதி நிலையையும் செழிப்பையும் ஊக்குவிக்கிறது
உப்பை எப்போது மாற்ற வேண்டும்
உப்பு ஈரமாகி விட்டாலோ அல்லது நிறம் மாறிவிட்டாலோ அதை மாற்றிவிட வேண்டும். சிறந்த பலன்களை பெற ஒவ்வொரு ஏழு முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை உப்பை மாற்றுவது சிறந்தது. பயன்படுத்திய உப்பை வீட்டிற்கு வெளியே குறிப்பாக மண் அல்லது ஓடும் நேரில் அப்புறப்படுத்த வேண்டும்.

கூடுதல் நன்மைகள் பெற
அதிகபட்சமாக குளியலறையை சுத்தமாக நல்ல காற்றோட்டத்துடன் தேவையற்ற பொருட்கள் இன்றி வசதியாகவும் வைத்திருக்க வேண்டும். ஒரு நேர்த்தியான சூழலும் அதனுடன் உப்பு பரிகாரமும் இணையும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் உருவாக்குவதிலும் செல்வத்தையும் ஈர்ப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTVPrime பொறுப்பாகாது.

