சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் சென்று அங்கிருந்து சாலை வழியாக, காரைக்குடிக்கு சென்று அடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செல்லும் வழியில் இரு புறமும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி நின்று விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)
இதனால், விஜயின் பிரச்சார வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது. இதனிடையே, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் சிறிது தூரம் சாலையில் சைக்கிள் ஓட்டினார். சைக்கிள் பயணத்திற்குப் பிறகு திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் விஜய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக விஜயின் பாதுகாவலர்கள் விஜய்யை கை தாங்கலாக பிடித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சைக்கிள் ஓட்டியபோது தடுமாறி கீழே விழுந்த விஜய்! pic.twitter.com/tLjCRKaZDE
— சு.புகழேந்தி (@Pugal0405gmail4) April 10, 2026

