கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ்டைல்ஸில் , வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தில், வரி ஏய்ப்பு புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இரண்டு கார்களில் வந்த எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனையைத் தொடங்கினர்.
கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
இந்தச் சோதனையை யொட்டி, கடை தற்காலிகமாக மூடப்பட்டு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவை மட்டுமின்றி சேலம், கோபி, திருப்பூர், ஊட்டி, கரூர் மற்றும் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகளிலும் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் கணக்குத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருமான வரித்துறையிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை.
குறிப்பாக, தேர்தல் சமயத்தில் ஜவுளி மற்றும் வணிக நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை நடப்பது வாடிக்கைதான் என்றாலும், கரூரைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவரின் நிறுவனம் ஏழு மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வரிச் சோதனையா அல்லது பின்னணியில் ‘பெரிய புள்ளிகள்’ யாராவது இருக்கிறார்களா? அடுத்த அப்டேட்டில் பார்ப்போம்.

