தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், தவெக தலைவராகவும் இருப்பவர் விஜய். விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் த்ரிஷாவுடன் ஆன சர்ச்சை ஒரு பக்கம். இவர் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவர விருந்த நிலையில், சென்சார் பிரச்சனையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு காத்திருக்கின்றனர்.
அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

ஆனால், தேர்தல் நெருங்கி விட்டது படம் வெளியாக வாய்ப்பில்லை என தெரிந்து விட்டது. இதனால், தேர்தலுக்குப் பின் தான் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. குறிப்பாக மே மாதம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் பணியாற்றியவர்கள் அவர் குறித்து பேட்டிகளில் அவ்போது, சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.
பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

அப்படி, விஜயுடன் இணைந்து பிரியமுடன் நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை கௌசல்யா தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அதில், யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நபர் தான் விஜய். படப்பிடிப்பில் இயக்குனர் என்ன கூறினாலும் எந்த ஒரு தலைகணமும் இல்லாமல் அதைக் கேட்டு நடிப்பார். அப்போது அவர் நடிகர் இன்று அரசியலுக்கு சென்று விட்டார். இன்றும் அவர்கள் குணம் எதுவும் மாறவில்லை அவரின் ரசிகர்களின் பலத்தை பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

