Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!
    கோவை

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026Updated:April 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-corporation-manages-drinking-water-supply-siruvani-levels-drop
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், கோவை மாநகராட்சிக்கு நாள்தோறும் 33.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3 குடிநீர் திட்டம், வடவள்ளி – கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!

    இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இதனால் அதில் எடுக்கப்படும் குடிநீர் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் ஒரே மாதிரி சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை, ஒரு சில இடங்களில் வாரம் ஒரு முறையும், சில இடங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    திமுக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த விபரீத.. கால் நசுங்கி கிடந்த திமுக நிர்வாகி..!

    கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    இதனை ஈடு செய்ய பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதல் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கோவை மாநகரில் நாளொன்றுக்கு 33.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது:

    கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகை நீர் ஆதாரங்களின் மூலம் தினமும் 330 எம்.எல்.டி (ஒரு எம் எல் டி என்பது 10 லட்சம் லிட்டர்) எடுக்கப்படுகிறது.

    இவை 100 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடை காலம் நெருங்குவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைந்து உள்ளது. அதை ஈடுகட்ட பில்லூர் திட்டத்தில் இருந்து கூடுதல் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை, இருப்பினும் கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும் போது

    50 அடி உயரம் கொண்ட சிறுவாணி தற்பொழுது 16.3 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் இங்கு குடிநீர் எடுக்கப்படும் அளவு 100 எம்.எல்.டி யில் இருந்து 47.5 எம்.எஸ்.டி யாக குறைக்கப்பட்டு உள்ளது.

    வழக்கமாக கோடை காலம் தொடங்கும் சூழலில், அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் அதன்படி கடந்த இரு வாரங்களாக சிறுவாணி அணையில் இருந்து சராசரியாக 45 முதல் 50 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களுக்கும் இதே அளவுக்கு குடிநீர் அளவுக்கு தான் குடிநீர் எடுக்கப்படும் என்றும் கூறினர்.

    City Corporation Water Supply Coimbatore District Dams Coimbatore Water Scarcity Pillur Water Scheme Siruvani Dam Water Level Summer Heat Impact Water Supply Regulation குடிநீர் விநியோக சீரமைப்பு கோடை வெயில் பாதிப்பு கோவை குடிநீர் தட்டுப்பாடு கோவை மாவட்ட அணைகள் சிறுவாணி அணை நீர்மட்டம் பில்லூர் குடிநீர் திட்டம் மாநகராட்சி குடிநீர் விநியோகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.