இயக்குனர் அட்லி இயக்கிய முதல் திரைப்படத்திலிருந்து இறுதியாக எடுத்த திரைப்படம் வரை பல படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி திரைப்படத்தை எடுத்ததாக அவரே பல சமயங்களில் ஒத்துக் கொண்டுள்ளார். அந்த அளவுக்கு, சுட்டு சூப்பராக படம் எடுப்பதில் அட்லி ஒரு கெட்டிக்காரர் என்று சொல்லலாம்.

இந்நிலையில், அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கியுள்ள புது திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியானது. ராக்கா என்ற பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தில் ராட்சச உருவத்தை பார்த்த ரசிகர்கள் ஐ படத்தில் வரும் என்னோடு நீ இருந்தால் பாடல் காட்சியிலிருந்து அட்லி சுட்டு விட்டார் என வழக்கம் போல அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

முன்னதாக, இயக்குனர் சங்கர் பியூட்டி அண்ட் பீஸ்ட் படத்தின் கான்செப்ட் தழுவி தான் ஐ படத்தை உருவாக்கி இருந்தார். மேலும், அதை நினைவுபடுத்தும் விதமாக என்னோடு நீ இருந்தால், பாடலில் சிஷ்யன் விக்ரமுக்கு ராட்சத கெட்டப்பை போட்டு நடிக்கவும் வைத்தார்.

அல்லு அர்ஜுனனை வைத்து அட்லி இயக்கி வரும் இந்த திரைப்படத்தை அப்படியே காப்பி அடித்தது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், இது ரொமான்டிக் படமாக இருந்தால் அதே படம் தான் அப்பட்டமான காப்பி என இப்பவே ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், ராக்கா படம் சங்கரின் ஐ படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆன படமாக இருக்குமோ எனவும் ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#Raaka isn’t just a film… it’s a part of me I’ve carried for years. For 18 years, I held on to one idea, never letting it fade.
— atlee (@Atlee_dir) April 8, 2026
It tested me, shaped me, and stayed with me through everything. And honestly… this is just the beginning#HappyBirthdayAlluArjun sir@alluarjun… pic.twitter.com/UuKdpJRChs

