பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் டிபன் ஆக இருக்கும். அதற்கு எப்போதும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றை செய்வோம். சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே, இந்த ஒரு முறை இந்த ரோசாப்பூ சட்னியை செய்து பாருங்கள். இந்த சட்னி சுவையாக இருப்பதுடன் நான்கு நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!
தேவையான பொருட்கள்
- 10 சின்ன வெங்காயம்
- ஐந்து வரமிளகாய்
- நான்கு காஷ்மீரி மிளகாய்
- சிறிதளவு புளி
- ஒரு சிறிய தக்காளி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க,
- ஒரு டீஸ்பூன் கடுகு
- ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 3 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
- ஒரு கொத்து கருவேப்பிலை
செய்முறை

Step 1: முதலில் ஒரு வடசட்டியை சூடாக்கி அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பின்னரே மிளகாய் சேர்க்க வேண்டும்.
Step 2: அப்போதுதான் இந்த சட்னியின் கவர்ச்சிகரமான சிறப்பு நிறம் கிடைக்கும். பின்னர் தக்காளி மற்றும் புளியை சேர்த்து தக்காளி குலைந்து போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும், ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
Step 3: சட்னியை தாளிக்க ஒரு வடசட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு பொறியவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள சட்னியை உடன் சேர்க்கவும். சட்னி நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சூப்பரான சற்று காரமான, கண்ணைக் கவரும் ரோசாப்பூ சட்னி ரெடி.

