லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து முதல் படத்தை அவரை வைத்து பிரபல விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கினார். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு பாலிவுட் ஹீரோயின் நடித்தாலும், ரசிகர்களிடம் பெரிதாக இந்த படம் ரீச் ஆகவில்லை. அதனை தொடர்ந்து, அந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகாமல் இதே சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய RS செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது, லீடர் படத்தில் நடித்துள்ளார். இந்த லீடர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஷாம் சந்தோஷ் பிரதாப் ஹாய் ராஜ் குட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைந்துள்ளனர்.
திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!
இந்நிலையில், லீடர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று திரையரங்கில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

ஹீரோ லெஜெண்ட் சரவணனை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் இனிவரும் நாட்களிலும் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
