வரும் தேர்தலில் பாஜக சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில், இன்று வெளியான பட்டியலில், அவருடைய பெயர் இல்லாததால் ஆதரவாளர்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மற்றம் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக சார்பாக வெற்றி பெறும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!
ஊழல், அலட்சியம் மற்றும் DMK அரசின் துரோகத்தால் சோர்ந்துபோன தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கிறது.
மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையில், இந்தியா வலிமை, விரிவாக்கம் மற்றும் தெளிவான நோக்கத்துடன் முன்னேறி வருகிறது.
நாடு முன்னேறிக்கொண்டிருக்கும்போது, தோல்வியடைந்த, அகந்தைமிகுந்த மற்றும் சுயநலத்துடன் செயல்படும் DMK அரசால் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.

நான் ஒரு கட்சித் தொண்டனாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி 210 இடங்களை வெல்லும் இலக்குடன், அனைத்து BJP மற்றும் NDA வேட்பாளர்களுடன் தோள் கொடுத்து நிற்கவும், பிரசாரம் செய்யவும் உறுதிபடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

