பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மதுவிற்றல் சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் தங்கம் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கிபாளையம் தேவம்பாடி வலசு செல்லாண்டிபாளையம் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு ஆய்வாளர் பழனியம்மாளுக்கு தகவல் வந்தது தெரிகிறது.இதை அடுத்து மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் தங்கம் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!
அப்பொழுது, அருண் பிரசாத் என்பவர் தோட்டத்தில் பால் கேனில் சாராய ஊரல் போடப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து, சாராயம் காய்ச்சும் செயலில் ஈடுபட்ட அருண் பிரசாத் (39) ஆண்டியப்பன் (25) முத்துக்குமார் (44) கைது செய்த விசாரணை மேற்கொண்டனர்.
துரோகம் செய்த கள்ளக்காதலன்?.. ஆத்திரத்தில் பைக்கிற்கு தீ வைத்த காதலி கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
இதில், இவர்கள் செல்போன் செயலில் யூடுயுப் மூலம் சாராயம் காய்ச்சும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. மதுவிலக்கு போலீசார் பால்கேன் ஊரல்களை பறிமுதல் செய்து நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர். யூ டியூப் மூலம் சாராயம் காய்ச்சிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

