நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மார்ச் 29ஆம் தேதி தனது கட்சிக்கான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். குறிப்பாக, 234 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு 30 வேட்பாளர்களையும் அறிவித்தார். முன்னதாக, இவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

இரண்டு தொகுதிகளில் களமிறங்கி இருப்பது ஒரு தொகுதியில் சொதப்பினாலும் இன்னொரு தொகுதியில் எப்படியாவது வென்று விடலாம் என்பது அவரது பிளானாக இருக்கக்கூடும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!
இந்நிலையில், விஜய் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனுவை கொடுத்திருந்தார். அதை அந்த அதிகாரி வாங்கிய போது விஜயை பார்த்த புகைப்படத்தை பகிர்ந்து இந்த அதிகாரி ஏன் இவ்வளவு கோபமாக முறைக்கிறார். இவ்வளவு கோபம் எல்லாம் கூடாது மேடம் என தவெகவினர் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட தொடங்கிவிட்டனர். அதே சமயம், அந்த அதிகாரி எதார்த்தமாக கூட பார்த்திருக்கலாம். இவர்கள் இஷ்டத்துக்கு கதை கட்டி விடுகிறார்கள் எனவும் ஒரு தரப்பினர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

