நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மார்ச் 29ஆம் தேதி தனது கட்சிக்கான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். குறிப்பாக, 234 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு 30 வேட்பாளர்களையும் அறிவித்தார். முன்னதாக, இவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!
நேற்று, கொளத்தூரில் பிரச்சாரம் செய்த விஜய் அடுத்ததாக ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து காருக்கு சென்று விட்டார். மேலும், விஜய் கொளத்தூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுதே தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், விஜய் பிரச்சார வாகனத்தை சுற்றி மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பதாகவும், இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போலீசார் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை என்று கூறி பாதுகாப்பை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றி கழகம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)
இதன் காரணமாக கொளத்தூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு வில்லிவாக்கம் சென்று கொண்டிருந்த விஜய் பாதியிலேயே பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் ஏறி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரம் திடீரென சரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், விஜய் பிரச்சாரம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் விஜய் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்வதற்காக எதிர்க்கட்சிகள் பல சதிகளை செய்து வருகிறது என்றும், ஆனால் மக்கள் சாவதற்கு வழிகாட்டியாக திமுக இருக்கிறது என்றும், இன்றைக்கு கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று தெரிந்ததும் தேவையே இல்லாமல் காலி பஸ், குப்பை வண்டிகளை எல்லாம் இந்த பக்கம் அந்த பக்கம் போய்க்கொண்டே இருக்கிறது.

அவர்களுக்கு இருக்கும் கடுப்பை எல்லாம் இப்படி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறார் என்று வண்டியை எல்லாத்தையும் நிறுத்திவிடுவார்கள். ஆனால், பல காலிபஸ்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டே இருக்கிறது என்ன காரணம் என்றால், அந்த பஸ்ஸில் யாராவது அடிபட்டு உயிரிழந்தால் அந்த பழியை கூட விஜய் மீது போடுவதற்காக திமுக இந்த மாதிரியான கேவலமான வேலையை செய்து மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

