தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
அதன்படி வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கும் பயணத்தில், கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் பக்கபலத்தில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஆர்பரிக்கும் ஆதரவுக்கு மத்தியில் – தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன்.
என்னை குடும்பத்தில் ஒருவராகப் பார்த்து தங்கள் பேரன்பையும் பேராதரவையும் வழங்கிவரும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பேன். அவர்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். வில்லிவாக்கம் மக்களின் நல்வாழ்விற்கு எப்போதும் துணை நிற்பேன். வரலாற்றுப் பொறுப்பு வாய்ந்த இந்த பெரும்பணியை எனக்கு வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்! வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!! நம்மால் முடியும்!!! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

