நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்ட்டா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், அந்த குழந்தைக்கு அப்பா தான் என்று DNA டெஸ்டில் உறுதியானால் ஆண் குழந்தையின் பராமரிப்பு செலவுகள் முழுவதையும் ஏற்பதாகவும் ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)
இப்படி இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக DNA பரிசோதனைக்கு மாதம்பட்டி ரங்கராஜை வரச்சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரமாரியாக பதிவுகளை போட்டிருந்தார் ஜாய் கிரிசல்ட்டா. முன்னதாக, இருதரப்பினரின் மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் DNA சோதனை நடத்துவதற்காக வழக்கறிஞர் ஆணையத்தை அமைத்தது.

இந்நிலையில், ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து நீதிபதி மரபணு பரிசோதனைக்கு பின் அறிக்கையை பெற்று அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும் படி வழக்கறிஞர் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.
பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!
இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்ட்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடைபெற்றது. அதில், ஜாய் ஜாய் கிரிசல்ட்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம் பட்டி ரங்கராஜ் தான் என மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

