கோவை அருகே உள்ள புகழ்பெற்ற மேலை சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “பட்டீசா… பட்டீசா…” பேரூரா … பேரூரா..”என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!
கோவையின் மிகப்பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற திருத்தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை 9 மணி அளவில் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை 4 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு தொடங்கியது.பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதீனம் ஆகியோர் முன்னிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.
தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!
அப்போது பக்தர்கள் எழுப்பிய “பட்டீசா… பட்டீசா… பேரூரா… பேரூரா…” என்ற சரண கோஷம் விண்ணை முட்டும் வகையில் அமைந்தது.இந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்கார் விமலா, கோவில் உதவி ஆணையர் சத்தியவதி மற்றும் கோவில் ஊழியர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பேரூர் உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட கால் ஆய்வாளர் 200 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாவின் தொடர்ச்சியாக வரும் 31-ஆம் தேதி இரவு பிரம்மாண்டமான தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

