தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ளது. திமுக பல கட்சிகளுடனும் அதிமுக சில கட்சிகளுடன் தவெக தனித்தும் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். விஜயை பொருத்தவரை திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு அன்றிலிருந்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என கூறப்படுகிறது.

எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!
முன்னதாக, விஜய் பெரம்பூரில் பேட்டியிடுகிறார். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத சப்ரைசாக இயக்குனர் சுந்தர் சி யும் இந்த தேர்தல் களத்தில் களமிறங்க இருக்கிறார். அதாவது, வாக்குப்பதிவுக்கு சரியாக இன்னும் 24 நாட்களே இருக்கின்றன. இந்த முறை நடிகர் விஜய் கட்சியை ஆரம்பித்து களமிறங்கினார். அதன் காரணமாக இத்தேர்தல் கூடுதல் கவனம் பெற்று இருக்கிறது.

முதலில் விஜய் என்டிஏ கூட்டணிக்கு தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் டிவிஸ்டாக நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என சொல்லி அறிவித்தார். அனைவரது கவனமும் இந்த தேர்தலில் விஜய் மீது இருக்க இப்படி சர்ப்ரைஸாக இயக்குனரும், நடிகரும் குஷ்புவின் கணவருமான சுந்தர்சி மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவிருக்கிறார்.

இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடவிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது மனைவி போல் இவரும் அரசியலில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

