கமலஹாசனுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால், சாமானியர்கள் மட்டும் இன்றி திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதாவது, கௌதம் மேனன், ரோபோ சங்கர், மணிகண்டன், லோகேஷ் கனகராஜ், அமீர் என அந்த பட்டியல் உள்ளது. அதேபோல் அந்த வரிசையில் சிங்கம் புலியும், இப்போது இணைந்திருக்கிறார்.
கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!
தாய்க்கிழவி படத்தில் தீவிரமான கமல் ரசிகராக இருந்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், அந்த படத்திற்கு பிறகு கமலஹாசனை சந்தித்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

தனியார் youtube சேனலுக்கு சிங்கம் புலி பேட்டி கொடுத்த நிலையில், கமலஹாசனை நேரில் சந்தித்ததே இல்லை என தாய் கிழவி பட சமயத்தில் கூறினேன். அதை அவர் பார்த்திருப்பார் போல, உடனே என்னை அழைத்தார்கள். நானும் போனேன் அப்போது, அவர் என்னிடம் உங்கள் பேச்சை எல்லாம் நான் யூடியூபில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என சொன்னார்கள்.
எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

உடனே எனக்கு இதெல்லாம் அவர் பார்ப்பார் என ஆச்சரியமாக இருந்தது. அவர் அத்தனையும் பார்க்கிறார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கிளம்புங்கள் எனக்கு வேறு வேலை உள்ளது என்று ஒரு முறை கூட அவர் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

