நடிகர் விஜய் தனது ரசிகைகள் மற்றும் பெண் தொண்டர்களை அரசியல் விமர்சிகர் பொன்ராஜ் அவமரியாக விமர்சிவிட்டார் என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், நான் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது விமர்சனத்தை காட்டமாகவும், ஆதாரத்தோடு விமர்சித்துள்ளார்.

அதில், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்திருப்பதோடு, சமூகத்தை நேசிக்கும் அனைவருக்குமே நமது அடுத்த தலைமுறை இவ்வளவு மோசமாக வளர்கிறது என்ற கவலையும் இருக்கிறது. இந்த கவலை விஜய்க்கும் வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால், ஒரு அறிக்கை வெளியிட்டு அதை கண்டித்து தவிர்க்க சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. விஜய்யின் கட்சியில் இருப்பவர்கள் என்னை என் குடும்பத்தை தம்பி சிவகர்த்திகேயன் குடும்பத்தையும், அஜித் குடும்பத்தையும் மோசமாக விமர்சித்தார்கள். மேலும், விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் என இருவரும் கட்டி பிடித்து நிற்பது போல புகைப்படங்களையும் உருவாக்கி விஜய் ரசிகர்கள் எழுதுகிறார்கள்.

இது போன்ற பதிவுகளை நானே பார்க்கும்போது அவர் பார்த்திருக்க மாட்டாரா? விஜய் ஏன் அதை கண்டிக்கவில்லை. அப்படி கண்டித்திருந்தாள் மோசமாக பேசிய தங்கைகள் அப்படி பேசும் பொழுது தவறு என்று பலரும் சுட்டிக் காட்டுவதைப் போல சொல்லி இருந்தால், பொன்ராஜ் ஐயா மீது புகார் கொடுக்க சொன்னீர்கள் அல்லவா அதற்கு தகுதியும் நேர்மையும் இருந்திருக்கும்.
கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!
உங்கள் கட்சிக்காரர்கள் மற்ற கட்சி பெண் நிர்வாகிகளை பெண்களை மோசமாக பேசிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு உங்கள் மீது புகார் கொடுத்தால், எப்படி இருக்கும். பொன்ராஜ் ஐயா மனதில் வைக்க முடியாமல் ஆதங்கத்தை கொட்டிவிட்டார்.

மற்றவர்கள் வெளிக்காட்டவில்லை. ஆதங்கத்தோடு பொன்ராஜ் ஐயா வெளிகாட்டியது குற்றம் என்றால், எங்களை நோக்கத்தோடு அவமானப்படுத்தும் குற்றம் தானே அதற்கு என்ன செய்யலாம் என்று காட்டமாக பேசி உள்ளார். இவரது இந்த பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

