வெள்ளி திரையில் 1994 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி, நடிப்பில் வெளியான அரசியல் நையாண்டி திரைப்படம் தான் அமைதிப்படை. இந்த திரைப்படம் தற்போது, பல வருடங்கள் கழித்து தேர்தலுக்கு முன்பாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரீ ரிலீஸ் ஆக செய்யப்படுகிறது.

இந்நிலையில், அமைதிப்படை ரீ ரிலீஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக செலவு எல்லாம் செய்யாமல், கால் கிலோ அல்வாவை வைத்து அமர்க்களமாக ப்ரமோஷனை பட குழு நடத்தியுள்ளது. சத்யராஜுக்கு கஸ்தூரி அல்வா ஊட்டி விட பதிலுக்கு சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வா ஊட்டி விட்டுள்ளார்.
காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

பாஜக மற்றும் திமுக அல்வா ஊட்டி விடுகிறது என்றும், இதுதான் இந்த கள்ளக் கூட்டணியா என்றும் தவெகவினர் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர். கில்லி, படையப்பா, சச்சின் வரவேற்பு கிடைத்ததை போல அமைதிப்படை ரீ ரிலீஸ்க்கு வரவேற்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

