உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏராளமான உணவு வகைகள் இயற்கை நமக்கு அளித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு அருமையான உணவுப்பொருள் ஆம்லா எனப்படும் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லிக்காய் அளவில் சிறியதாக இருந்தாலும், அது வழங்கும் நன்மைகளும் ஏராளம். நெல்லிக்காயில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த சத்தை தவிர இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கிறது என்று இந்த பதிவில் காண்போம்.

நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மேம்படும்
நெல்லிக்காயை ஆவியின் வேகவைத்து சாப்பிடும்போது உடலில் மெட்டபாலிசம் மேம்படும். இதை சாப்பிடும்போது, உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு குடல் ஆரோக்கிய மேம்படுவதோடு, மலச்சிக்கலில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்

நெல்லிக்காய் ஆவியில் வேகவைத்த நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். இது உடலை தாக்கும் ரேடிக்கல்ஸ்களை எதிர்ப்பதோடு ஆக்ஸிஜனேற்று அழுத்தத்தையும் குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சளி இருமல் போன்ற தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
பன்னீர் பிரியர்களே கவனம்.. காத்திருக்கும் ஆபத்துகள் இதோ..! உண்மை பின்னணி என்ன?..
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடெண்டல் சருமத்தின் நெகிழ்வு தன்மையை பராமரித்து உற்பத்தி உருவாக்குகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது மற்றும் முடியின் அடர்த்தியையும் வலிமையும் அதிகரிப்பதோடு முடி பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய்
முக்கியமாக இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுவதோடு நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது. இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயம் குறைகிறது. அதுவும் இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகிறது.

கண்பார்வை அதிகரிக்கும் நெல்லிக்காய்
கண்பார்வை மேம்படுத்த வேண்டுமானால் தினமும் ஆவியில் வேகவைத்த ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற மருத்துவ குணங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக அமைகிறது. தொடர்ந்து வேகவைத்த நெல்லிக்காய் உட்கொள்ளும் போது அது வயது தொடர்பான கண் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கவும் முடிகிறது.

முதலில் நெல்லிக்காயை எடுத்து நீரில் கழுவி ஒரு இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து ஏழிலிருந்து பத்து நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். பின்னர், அந்த வேக வைத்த நெல்லிக்காயை பகல் வேளையில் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

