தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் Ajith Kumar. ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான ஸ்டைலும், வலுவான திரைமுகமும் கொண்ட அவரின் சமீபத்திய வெளியீடான Good Bad Ugly திரைப்படம் வசூல் மற்றும் வரவேற்பு ஆகிய இரண்டிலும் பிளாக்பஸ்டர் சாதனையை படைத்தது.

இந்த வெற்றியின் பின்னர், அந்த படத்தை இயக்கிய Adhik Ravichandran உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, ரசிகர்கள் மத்தியில் “AK 64” என்று அழைக்கப்படும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் குறித்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், இப்படத்தை தயாரிக்கப்போகும் நிறுவனம் எது என்ற கேள்வியும் இன்னும் பதில் காணாமல் உள்ளது.

காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா த்ரிஷா?..
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து ரெஜினா கசாண்ட்ரா மிரட்டி இருந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குறித்து இவர் வெளிப்படையாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், அஜித் சார் அவருடன் பணியாற்றும் கலைஞர்களை மிகவும் ஊக்குமளிக்கும் வகையில் நடந்து கொள்வார். பெண்களை மரியாதையுடன் நடத்துவார். அவருடன் இணைந்து நடிப்பது என்பது அருமையான தருணம் ஈகோ எதுவும் பார்க்காமல் அவராக வந்து அனைவரிடமும் பேசுவார் என்று அதில் தெரிவித்துள்ளார்.

