கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா உடற்பயிற்சிகள் மூலம் தனது எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். சீரான உணவு முறையை பின்பற்றி உடற்பயிற்சி செய்து 47 வயதிலும், பிட்டாக இருந்து வருகிறார் ஜோதிகா.

அந்த வகையில், எடை குறைப்புக்கு பின்னரும் தற்போது வரை தொடர்ந்து தன் ஆரோக்கியத்தை பாராமரிக்க அன்றாடம் உடற்பயிற்சி செய்து வரும் ஜோதிகா வழக்கமான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யாமல் அதனை சில சில மாற்றங்களை கொண்டு வந்து பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் செய்த ஒரு உடற்பயிற்சியானது இணையதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் என ஆனதால் அவர்களை கவனித்து வந்த ஜோ தற்போது மீண்டும் நடிக்க துவங்கி விட்டார். அதிகம் இந்தி சினிமாவில் படங்கள் நடிக்கும் ஜோ சமீபத்தில் கருப்பு நிற மாடன் உடையில் செம ஸ்டைலிஷ் ஆக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பத்திரப்பதிவுக்காக இப்படியா?.. நிலம் வாங்க ரவி மோகன் செய்த அந்த ஒரு காரியம்..!

