திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவின் உட்பட்ட, வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், செம்பியநல்லூர், கணியம்பூண்டி, சின்னேரி பாளையம், பழங்கரை, குப்பாண்டம் பாளையம், தெக்கலூர் ஆகிய எட்டு ஊராட்சிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
திமுக vs அதிமுக vs விஜய்: மும்முனைப் போட்டியில் தமிழகம் – யாருக்கு எத்தனை இடங்கள்?..
இந்த பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. வாரத்துக்கு ஒரு நாள் கூட முறையாக குடிதண்ணீர் விநியோகம் செய்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த எட்டு ஊராட்சிகளை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த எட்டு ஊராட்சிகளிலும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய சூழலில் இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாகவும், முறையான குடிநீர் வினியோகம் கிடைப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த எட்டு ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் தடையின்றி தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

