என்னதான் தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு புதிய நடிகைகள் வந்தாலும் 80, 90களில் வந்த நடிகை மறக்கவே முடியாது. அந்த வகையில், இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கி பின் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

முன்னதாக தமிழில் மணிரத்தினம் இயக்கிய பாம்பே திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.இப்படி பிசியான நடிகையாக இருந்த மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதனுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
வசூலில் மாஸ் காட்டும் ‘யூத்’.. சம்பளத்திலும் கெத்து காட்டும் கென் கருணாஸ் – முழு விபரம் இதோ..!

தற்போது அதற்கான விழிப்புணர்விலும் அவர் ஈடுபட்டு வருகிறாராம். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!

இப்படி இருக்கையில், நடிகை மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாம்பே படங்களில் நடித்த மனுஷா கொய்ராலா இது என ஆச்சரியப்பட்டு கேட்டு வருகின்றனர்.

