திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அண்ணா அறிவாலயத்தில் விருப்பமானுகள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்கான, விண்ணப்ப படிவ கட்டணம் ரூபாய் 1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதிக்கும் ரூபாய் 25 ஆயிரம் மற்றும் மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு 15,000 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தான் நடிகர் சத்தியராஜ் மகள் திவ்யா சத்யராஜ் விருப்பமான தாக்கல் செய்தார். அவருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய திவ்யா சத்யராஜ் இது எனது முதல் நேர்காணல் என்றும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறேன். திமுகவுக்கு யாரும் எதிரியில்லை. வரும் தேர்தலில் திமுக நிச்சியமாக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

மேலும், திமுக மக்களுக்காக வேலை செய்யும் கட்சி என்றும் வாய்ப்பு கிடைத்தால் கல்வி சுகாதாரம் பெண்கள் நலன் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவேன் என்றும், திமுகவிற்காக உயிரையும் கொடுப்பேன் என தெரிவித்தார். மேலும், ஐந்தாண்டுகளாக தொண்டு நிறுவனத்தின் மூலம் மக்கள் சேவையில் இருப்பதாகவும், சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல திமுகவிற்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் கூறினார். மேலும், தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விருப்பமான அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

