விஜய் மனைவி தாக்கல் செய்த விவாகரத்து மனு இணையத்தில் கசிந்தது எப்படி என நீதிபதி விளக்கம் கொடுத்துள்ளார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைந்துள்ள விஜய் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு இணையத்தில் வெளியானது.
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் உள்ளதாகவும், தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகை யார் என கூறிவிடுவேன் என எச்சரிக்கையும் விடுத்தார். இது பெரும் சர்ச்சையானது.
விஜய் மீது ஏராளமான விமர்சனங்கள் விழுந்தாலும், சங்கீதாவையும் விமர்சித்தனர் ரசிகர்களும், தொண்டர்களும்.

அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் விஜய்க்கு விவாகரத்து விவகாரமும் தலைவலியை கொடுத்து வருகிறது. மறுபுறம், திரிஷாவுடன் விஜய் ஜோடி போட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் விசாரணைக்கும் வரும் என கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக விஜய்யின் செல்வாக்கை கெடுக்க இப்படி எல்லாம் நடக்கிறது என ஒரு பக்கம் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விவாகரத்து மனு இணையத்தில் வெளியானது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவிற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பதிலில், மனு கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து எந்தவித புகாரும் பதிவு செய்யவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவிய அந்த மனுவில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை இடம்பெறாததால், அது நேரடியாக நீதிமன்றத்திலிருந்து வெளியானதாக கருத முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து மனுதாரர் தரப்பிலிருந்து எந்த முறையான புகாரும் இதுவரை அளிக்கப்படாத நிலையில், அந்த மனு சங்கீதா தரப்பிலிருந்தே வெளியாகியிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற தகவலும் அந்த பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

